Wednesday, October 23, 2019

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019 -2020

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019 -2020


குருவின் பார்வை பலத்தால் உங்களின் வாழ்க்கை துணையே இனி உங்களுக்கு உதவிகரமாக துணை நிற்பார். தனவரவுக்குக் குறைவிருக்காது. தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள்.

உங்கள் முகத்திற்கு முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் பேசி வீண் பிரச்சினைகளை கொண்டு வருவார்கள். ஜாக்கிரதையாக பழகுங்கள். எவரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு பேச வேண்டாம். வில்லங்கம் வராமலிருக்க விலகி நிற்பதே நலம். உங்களின் தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உறவினர்களால் வீண் விரயங்களும், அலைச்சலும் உண்டாகும். 

பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். Guru peyarchi பொருளாதாரம்: உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சியால் பொருளாதாரம் மேம்படும். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதிலும் வெற்றி காண்பீர்கள். தீராத பிரச்னைகளுக்குத் நிரந்தர தீர்வு கிடைக்கும். திடீர்த் தனவரவு உண்டாகும். நின்று போன வீடு கட்டும் பணி இனி விரைவில் முடிவுக்கு வரும். 

பொன், பொருள் சேர்க்க நேரம் வரும். வாகன யோகமுண்டு. வேண்டியவர்களின் திருமணத்தை நீங்கள் முன்னின்று செய்து முடிப்பீர்கள். சாதனை படைக்கும் மன தைரியம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்குவார்கள். உங்களின் சமூக அந்தஸ்து பன்மடங்கு உயரும். தொழில்: வியாபாரத்தில் உங்களின் சுய அறிவைக் கொண்டு முன்னேறி அதற்கேற்ப லாபம் சம்பாதிப்பீர்கள். 

பழைய கடன்களை போராடித்தான் வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதனால் வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு மனக்கஷ்டம் ஏற்படும். அலைகழிப்பு இருக்கும். ஆனாலும் நண்பர்களின் உதவியினால் தடைப்பட்ட வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். 

சரியான நேரத்தில் சம்பள பாக்கி கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கல்வி: மாணவ, மாணவியர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்தபடி முன்னேற்றம் கிட்டும். தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல வேலை கிடைக்கப் பெறும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி உங்களது சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 

கலைத்துறையினர் எதார்த்தமான பல நல்ல படைப்புகளை கொடுத்து பாராட்டை பெறுவீர்கள். ஜாக்கிரதையாக இருக்கவேண்டியவை: எதையும் பல முறை யோசித்து செய்யுங்கள். எதையும் போராடித்தான் முடிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். புதிதாக அறிமுகமானவர்களை நம்ப வேண்டாம். 

தம்பதியருக்குள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எந்த பொறுப்புகளையும் யாரிடமும் ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக தலையிட்டு செயலாற்றுவது நன்மை பயக்கும். யாரிடமும் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நலம்.

 பரிகாரம்: பைரவரை வழிபட்டு வாருங்கள் காரிய சித்தி உண்டாகும். விநாயகருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நலம். உங்களால் முடிந்த அளவு ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019 -2020

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019 -2020


உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக பேச கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து விடையத்தில் அதிகப்படியான கவனம் தேவை. சொத்தை விற்பதாக இருந்தாலும் வாங்குவதாக இருந்தாலும் பண விடயத்திலும், ஆவணங்கள் விடயத்திலும் அதிகப்படியான அக்கறையோடு இருப்பது நல்லது.

கணவன் மனைவிக்குள் மூன்றாம் நபர் மூலமாக சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் உங்கள் குடும்ப விடையத்தை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. தனவரவு அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். 

உங்களின் பலம் பலவீனத்தை அறிந்து வைத்திருப்பது நல்லது. தொழில்: உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். ஆனாலும் சில நேரங்களில் மேலதிகாரிகளின் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பல நேரங்களில் ஓவர் டைம் எடுத்து வேலை செய்யவேண்டிய சூழல் உருவாகும். அதற்கேற்ற ஊதியம் உடனே கிடைத்து விடாது. அதற்காக மேலதிகாரிகளை கோபித்துக்கொண்டு அவர்களிடம் முரண்டு பிடிக்க வேண்டாம். 

பதவி உயர்வும் சம்பள உயர்வும் தாமதமானாலும் நிச்சயம் உங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியம் உங்களிடம் வந்து சேரும்.  வியாபாரிகளை பொறுத்தவரை சில நேரங்களில் மந்தமான சூழல் உருவாகும், சில நேரங்களில் விற்றுவிறுப்பாக இருக்கும். சந்தை நிலவரங்களை நன்கு ஆராய்ந்த பிறகு எதிலும் முதலீடு செய்வது நல்லது. 

பெரும் முதலாளிகள் வரை சிறிய வியாபாரிகள் வரை உங்களால் முடிந்த அளவிற்கு சில விளம்பர யுக்திகளை கையாண்டால் அதன் மூலம் உங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முனைவீர்கள். கல்வி: பள்ளி மணர்களை பொறுத்தவரை படிப்பில் ஆர்வம் கூடும், பாடத்தில் வரும் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்க தயங்க வேண்டும்.

 இந்த காலகட்டத்தில் உங்களின் அறிவாற்றல் மேம்படும். கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். கல்லூரி படிப்பை முடித்த பிறகு நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க நினைப்போருக்கு அதற்கான வாய்ப்பு சில போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கும். 

எதிலும் விடா முயற்சியோடு செயல்படுவது நல்லது.பொருளாதாரம்: அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியம் வெற்றி அடைந்து அதன் மூலம் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். 

அதே நேரம் சில நேரங்களில் வீண் விரயங்களும் ஏற்படும். புதிதாக வீடு கட்டும் யோகமும் உண்டு. அதே போல வீட்டை கட்டி பாதியிலேயே விட்டுருந்த பலர் இந்த காலகட்டத்தில் அதை கட்டி முடிக்க வாய்ப்புகள் உண்டு. கல்விக்காக அதிகம் செலவு செய்ய நேரிடலாம். 

பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத்தில் சில ஏற்ற தாழ்வுகள் அவ்வப்போது காணப்பட்டாலும் நிறைய நல்ல விடையங்கள் நடக்கும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டியவை: எப்போது வேண்டுமானாலும் திடீர் செலவு வரலாம்.

அதனால் பணத்தை சேமித்து வைத்திருப்பது நல்லது. சில சமயங்களில் எதிலும் நாட்டமில்லாத ஒரு நிலை இருக்கும். அது போன்ற நேரங்களில் இறைவனை வழிபடுவது நல்லது. சொத்து வாங்குதல் மற்றும் தொழிலில் சில ஏமாற்றங்கள் ஏற்படலாம். பண விடயத்தில் கவனம் தேவை. 

பரிகாரம்: குலதெய்வத்தை முறையாக வழிபடுவது நல்லது. ஊனமுற்றோர்களுக்கு உதவுங்கள். வியாழ கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

Monday, October 21, 2019

பெண்களின் மார்பகம் பற்றி தேரையர் சித்தர் கூறியது

பெண்களின் மார்பகம்  பற்றி தேரையர் சித்தர் கூறியது 


சித்தர்களின் பாடல்களின் ஊடே பயணிக்கும் போது, சில பாடல்கள் தரும் ஆச்சர்யங்கள் நம்புவதற்கு அரிதானதாகவும், அவற்றின் சாத்திய அசாத்தியங்கள் குறித்த சந்தேகங்களும் வருவதுண்டு. இம் மாதிரியான பாடல்களின் ஊடே பொதிந்திருக்கும் தகவல்கள் யாவும் மேலதிக ஆய்வுகளுக்கானவை. அந்த வகையில் இன்று தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் காணப்படும் ஒரு தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.

பெண்களின் மார்பகம் என்பது பாலூட்டும் ஒரு உறுப்பு. தாய்மையின் அம்சம். பரம்பரை உடல் வாகு மற்றும் உண்ணும் உணவினைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மார்பகங்களின் அளவுகள் வேறுபடுகிறது. எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இந்த நிஜங்களைத் தாண்டி வாழ்வியல் சூழலில் தாய்மையின் அம்சமான மார்பகங்கள் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகப் படுகிறது.

பெண்களின் மார்பகங்களை பெரிதாக்குகிறோம், சிறியதாக்குகிறோம், ஆழகுபடுத்துகிறோம் என்கிற பெயரில் நவீன மருத்துவம் பல்வேறு அறுவை சிகிச்சைகளையும், வைத்திய முறைகளையும் முன் வைக்கின்றன. எனினும் இத்தகைய சிகிச்சைகள் பெண்களின் உடல் நலத்துக்கு எதிரானது, காலப் போக்கில் பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது. இதனை பெண்கள் உணர்ந்திட வேண்டியது அவசியம்.

எல்லாம் சரிதான், மேலே சொன்ன விவரங்களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கக் கூடும்.

தேரையரும் கூட பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கவும், சிறியதாக்கவும் ஒரு வைத்திய முறையினை கூறியிருக்கிறார்.

தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு.....

கொள்ளப்பா மூஞ்சூரை நீரதிலே விட்டு

குதித்தாவி நீந்திடும்போ திருதுண்டாக

மெள்ளப்பா கத்தியினால் வீசிப்போடு

மிதந்ததுவும் முழுகினதும் வெவேறே கண்டு

தள்ளப்பா பசுஞ்சாணம் கவசம் செய்து

தவறாமல் புடமிடவே நீறிப் போகும்

விள்ளப்பா ப்றணியில் புரிவாய் செய்துவைத்து

மெல்லியர்கள் கொங்கையிலே தடவிப்பாரே.





பாரடா அழுத்திய துண்டத்தின் பற்பம்

பாங்காகப் பூசிடவே சுருங்கிப் போகும்

வேரடா மிதந்த துண்டு பறபந்தன்னை

மேலிட்டுப் பூசிடவே பெருத்துக் காணும்

மாரடா இப்படித்தான் செய்து பாரு

மகத்தான என்குருவின் முறை பொய்யாகாது

சாரடா சிவசக்தி பூசை தன்னை

தவறாது செய்திட்டால் சாதிப்பாயே.


மூஞ்சுறு என்னும் எலியைப் பிடித்து தண்ணீரில் போட்டால் அது குதித்துத் தாவி நீந்துமாம். அப்போது அதனை கத்தியினால் இருதுண்டாக வெட்டிட வேண்டுமாம். அப்ப்டி வெட்டிய உடன் ஒரு துண்டானது நீர்ல் மிதக்குமாம். மற்றது மூழ்கி விடுமாம். இப்போது இந்த இரு துண்டுகளையும் தனித் தனியே பசுஞ் சாணத்தினால் கவசம் செய்து புடமிட வேண்டும் என்கிறார் தேரையர். இப்படி புடமிட்டால் அது எரிந்து நீறாகி விடுமாம்.இவற்றை தனித் தனியே சேகரம் செய்து கொள்ள வேண்டும்.


இப்போது நீரில் மூழ்கிய பாகத்தினை புடமிடக் கிடைத்த நீறினை பெண்ணின் மார்பில் பூசினால் அந்த மார்பகம் சுருங்கி விடுமாம். அதே போல நீரில் மிதந்த மூஞ்சூறின் உடல் பாகத்தை புடமிடக் கிடைத்த நீறினை பெண்ணின் மார்பில் பூச அந்த மார்பகம் பெருத்து விடுமாம். இந்த வைத்திய முறையைச் செய்யும் போது தவறாமல் சிவசக்தியை வணங்கி செய்திட வேண்டும் என்கிறார்.

பல லட்சம் ரூபாய் செலவும், சிகிச்சைக்குப் பின்னர் பக்க விளைவுகளையும் கொண்டு தரும் நவீன வைத்திய முறைக்கு சவால் விடும் ஒரு வைத்திய முறையினை நமது முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அருளியிருக்கின்றனர். இந்த முறையின் சாத்திய அசாத்தியங்கள் ஆய்வுக்கும், மேம்படுத்துதலுக்கும் உட்பட்டவை என்றாலும் கூட நமது முன்னோரின் அறிவின் திறம் எத்தகையதாக இருந்திருக்கிறது என்பதற்கு இம் மாதிரியான பாடல்கள் உதாரணமாய் இருக்கிறது.

Saturday, October 19, 2019

தேரையர் சித்தர் வரலாறு

தேரையர் சித்தர் வரலாறு


 தேரையர் சித்தர் 


அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் சித்தர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்தவைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாகின்றன. மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர்.

அவ்வண்ணமே சிகிச்சைமுறைகளிலும் இவருக்கு அதிக வல்லமை இருந்தது. இவர் பதினாறு நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் வைத்தியகாவியம், இரசவர்க்கம், கருக்கிடை, வைத்திய சிந்தாமணி, மருத்துவ பாரதம் என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். மேலும் பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி நூல், நெய்க்குறி நூல், தயில வர்க்க சர்க்கம், சிகிச்சை ஆயிரம், யமக வெண்பா, நாடிக் கொத்து, நோயின் சாரம் முதலிய நூல்களும் பல உள்ளன.

தேரையர், சித்தர்களின் கூட்டத்தில் மிகவும் தனித்துத்தெரியும் ஒருவராவார். இவர் அளவுக்கு சோதனைகளைச் சந்தித்த ஒரு சித்த புருஷரைப் பார்ப்பது அரிது. சோதனைகளே இவரைச் சாதனையாளராக ஆக்கின.


மனித வாழ்வில் போட்டி, பொறாமை, மன எரிச்சல், ஆகியவை சரா சரி மனிதர்களின் குணங்கள். ஆனால் தேரையர் சித்தர் வரலாற்றைப் பார்க்கும் போது, சித்த புருஷர்களால் கூட போட்டி, பொறாமை போன்றவற்றை வெல்ல முடியாது போலும் என்று நாம் எண்ண வேண்டியுள்ளது.

தேரையர் என்பது, காரணப் பெயர். உண்மையில் இவரது இயற்பெயர், ராமதேவன் என்கிறது, அபிதான சிந்தாமணி. ராமதேவனின் ஞான குருவின் பெயர் தர்மசௌமினி.

அவர் ஒரு சித்தரல்லர், முனிவர்! சித்தர் வேறு, முனிவர் வேறா? என்று கேட்கலாம். ஆம்! முனிவர்கள் வேத வழி நடப்பவர்கள். மந்திர உபதேசம் பெற்று யாகம் வளர்த்து வரம் பெற உழைப்பவர்கள். தர்ம நெறிதான் இவர்கள் நெறி ஆயினும் பெயர் புகழ் விளங்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். ஆனால், சித்தர்கள் இவர்களில் பெரிதும் மாறுபட்டவர்கள்.

வேதங்களை இவர்கள் ஒரு பொருட்டாகக் கருதத் தேவையில்லை. இவர்களுக்கு உள்ளம்தான் கோயில் உடம்புதான் ஆலயம். உடம்பை வளர்த்து அதன் வழி உயிரையும் வளர்ப்பவர்கள். வரங்களுக்காகத் தவம் இயற்றுவது இவர்கள் செயலல்ல. தன்னையறிந்தாலே போதும், தானாக தெய்வமறியும் நிலை வந்துவிடும் என்பது இவர்கள் சித்தாந்தம்.


குறுகிய காலத்திலேயே, ராமதேவன் ஒரு சித்தயோகி என்பதையறிந்து, தன்னிடம் இருந்தால் காலம்தான் வீணாகும் என்பதை உணர்ந்து கொண்டுவிட்டார். காரணம், தர்மசௌமினியிடம் ராமதேவன் கேட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை.

‘‘குருதேவா….. ஆதிசக்தியிடம் வரம் வேண்டி தவம் செய்கிறீர்கள். இடையில் சூரியதேவனுக்கு ஒரு தனி வணக்கமுறை, பரிவார தேவதைகளுக்கு ஒரு தனி வணக்கமுறை; பின் இறுதியாக மூல இறை சக்தியிடம் வேண்டல் என்று, உங்கள் தவ நெறியில் பல கிளைகள். நமக்கெல்லாம் மேலான ஒரு சக்தி ஆதிசக்தி என்றால், அதைப் படைத்ததுயார்? ஒன்று இருக்கிறது என்றால், அதை ஒருவர் படைத்திருக்க வேண்டுமல்லவா? தானாக ஒன்று எப்படி உருவாகமுடியும்?’’ என்று பலவிதமாக ராமதேவன் கேட்ட கேள்விகள், தர்மசௌமினியை திணறடித்துவிட்டன.


தேரையர் சித்தர் அகத்தியரிடம் செல்லுதல்

‘‘ராமதேவா…. உனக்கான பதிலை அகத்திய முனிவரால்தான் தரமுடியும். அவர் ஒருவர்தான் முனிவருக்கு முனிவர், சித்தருக்குச் சித்தர்’’ என்று தர்மசௌமினி, ராமதேவனுக்கு வழிகாட்ட, ராமதேவனும் அகத்தியரின் பாதங்களில் போய் விழுந்து மாணாக்கராய் ஏற்றுக்கொள்ளச் சொன்னார்.


ஆனால், அகத்தியர் அவ்வளவு சுலபத்தில் சம்மதிக்கவில்லை. தர்மசௌமினி காரணம் இல்லாது ராமதேவனை தன்னிடம் அனுப்பவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட அகத்தியர், ராமதேவனை சற்று எட்டவே நிறுத்தி, அவரைச்சோதிக்க ஆரம்பித்தார்.


உண்மையில் சித்தஞானம் பெற விரும்பும் ஒருவன் அலட்சியம், அவமானம் முதலியவற்றைச் சந்தித்து அதில் தேறி, பொறுமையுடன் திகழ்ந்தாலே அவனால் அநேக நுட்பங்களை விளங்கிக்கொள்ள முடியும். சராசரி புத்தி உள்ளவர்கள் அலட்சியப்படுத்தப்படும்போதே பதிலுக்கு அலட்சியம் காட்டி ஓடிவிடுவார்கள்.


உண்மையான ஞானிகள் எவ்வளவு தடை வந்தாலும், அலட்சியப்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து குருபக்தியோடு பொறுமையாக இருப்பர். ராமதேவனிடமும் கொஞ்சம், ‘நான்’ இருந்ததாலேயே அகத்தியர், அவரைச் சற்று தூரத்திலேயே நிறுத்தினார். இருப்பினும், ராமதேவன், அகத்தியரின் வைத்திய ஞானம் முழுவதையும் ஈடுபாட்டுடன் கற்றுத் தெளிந்து விட்டார். சொல்லப் போனால், அவர் குருவை வெல்லும் ஒரு சிஷ்யன் என்கிற அளவிற்குத் தேறிவிட்டார்.


ராமதேவன் தேரையர் சித்தர் ஆகுதல்

இப்படித் தேறியதாலேயே காலமும் இவரை தேரையர் ஆக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளித்தது. காசிவர்மன் என்று ஓர் அரசன். கடுமையான தலைவலியால் நிம்மதியை இழந்து விட்டான். அரண்மனை வைத்தியர்களால் அரசனின் தலைவலியில் அணுவளவைக் கூட குறைக்க முடியவில்லை. இறுதியாக, விஷயம் அகத்தியர் காதுகளுக்குப் போனது. தனது சிஷ்யர்களுடன் அவரும் காசிவர்மனைச் சந்தித்தார்.


உச்சந்தலையில், அதாவது கபாலத்தில் குடைச்சல் உள்ளது என்று காசிவர்மன் கூறியதை வைத்து, அவனது வியாதி தலைவலியில்லை என்பதை தீர்மானித்துவிட்டார். கபாலத்தில் குடைச்சல் என்றால் கபாலத்தைத் திறந்து பார்த்தால்தான் கண்டறிய முடியும். அனேகமாகக் கபாலத்தில் வெப்பவாயு, சமயங்களில் மேலேறி பின் அங்கிருந்து வெளியேற வழியின்றி அங்கேயே அடைந்து கிடக்கும். இதுகூட வலியாக வெளிப்படும்.


அப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று அனுமானித்த அகத்தியர், காசிவர்மனின் கபாலத்தை ஒருவகை மெழுகைப் பயன்படுத்தி வலியே இல்லாமல் பிளந்துவிட்டார். உள்ளே பார்த்தவருக்கு, பலத்த ஆச்சரியம்.


காசிவர்மன் சுவாசிக்கும்போது காற்றோடு காற்றாக உள்ளே நுழைந்துவிட்ட ஒரு தேரைக்குஞ்சு, மூளைவரை சென்று அங்கே அப்படியே பாறைத்தேரைபோல தங்கிவிட்டது. அதனுடைய அசைவுதான் காசிவர்மன் தலையில் வலியாக உணரப்பட்டிருக்கிறது. தேரையை வெளியே எடுத்து கபாலத்தை மூடினால் பிரச்சினை தீர்ந்துவிடும்.


ஆனால் தேரையோ, திறந்த கபாலம் வழியாக வெளிச்சம் பட்டதால் இறுகப் பிடித்துக் கொண்டது. அதைக் குத்தி வெளியே எடுக்க முனைந்தால், மூளைத்திசுக்கள் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க என்ன வழி என்று தெரியாமல் அகத்தியர் தவித்தபோது, ஒரு சிறு பாத்திரத்தில் நீருடன் கபாலம் அருகில் வந்து நின்ற ராமதேவன், அந்த நீரில் அசைவை உருவாக்க… சிறிது நேரத்தில் தேரை மூளையை விட்டுவிட்டு அப்படியே தண்ணீர்ப் பாத்திரத்துக்கு தானாகத் தாவியது.


அகத்தியரும் வேகமாகக் கபாலத்தை மூடி மெழுகிட்டார். சீடன் ராமதேவனின் இந்த சமயோசிதச் செயல், அகத்தியரை மகிழச் செய்தது. அதே சமயம், தேரையை வெளியேற்றுவதில் அகத்தியரிடம் பாராட்டுப் பெற்றதால், ராமதேவனும் தேரையர் சித்தர் ஆனார், அதன்பின் அகத்தியர் தன் ஆயுர்வேத வைத்யமுறை அவ்வளவிற்கும் அணுக்க சீடராக தேரையரைத் தான் கருதினார். இன்னொரு சம்பவம், தேரையரை வைத்திய சிரோன்மணியாகவே ஆக்கிவிட்டது. பாண்டிய மன்னர்களில் ஒருவனுக்கு முதுகில் கூன் விழுந்துவிட்டது.


அதை நீக்கும் வழிவகை தெரியாமல் வைத்திய உலகமே தவித்தது. தேரையர், அகத்தியர் ஆசிரமத்தில் தற்செயலாக அதற்கான மருந்தைக் கண்டறிந்தார். மூலிகைச்சாறினை சட்டியில் ஊற்றிக் காய்ச்சிய போது அதன் ஆவி சட்டிக்கு நேர் மேல் உள்ள ஒரு வளைந்த மூங்கிலின் வளை முனையில் பட்டிட, அந்த வளைந்த முனை பட்டென்று வளைவை விட்டு நேர்பட்டது.


சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த தேரையர், அதைப் பார்த்து ஆனந்தத்தில் எகிறிக் குதித்தார். மூங்கிலும் மனிதனும் பல விதங்களில் ஒன்றானவர்கள். இரண்டுக்குமே சுவாசம் பொது. இரண்டுமே சத்தம் எழுப்பும்.


இரண்டுமே உயர்ந்தெழுந்து வளர்ந்து, பின் சாய்ந்து முதுமை அடைபவை. மனிதனோடு மரணத்தின் போது மயானம் வரை வருவது மூங்கிலும் தான்… மூங்கில் மற்ற மரங்களைப் போல என்றும் பசுமையாக இருக்கக் கூடியதும் அல்ல. தனித்தும் இது வளராது. கூட்டமாகவே வளர்வது.


இப்படி மனித வாழ்வுக்கும் மூங்கிலுக்கும் அனேக சம்பந்தங்கள். இந்நிலையில் மூலிகைச் சாறின் ஆவி, வளை மூங்கிலையே நிமிர்த்துகிறது என்றால், இந்தச் சாறு எதைத் தான் நிமிர்த்தாது? தேரையரும், காய்ச்சிய சாறினை பாண்டிய மன்னனுக்குப் பூசிட, அவனது கூனும் நிமிர்ந்தது. இதனால் அரசன், தேரையரை அகத்தியருக்குச் சமமாக பாவித்தான். இது, அகத்தியரின் மற்ற சிஷ்யர்களுக்குள் பொறாமையை மூட்டியது.

அவர்களும் அகத்தியரிடம் கோள் மூட்டினர். அகத்தியரும் தேரையரை அழைத்து, ‘‘இனி உனக்கு என் தயவு தேவையில்லை’’ என்று கூறி, தனித்துச் செயல்படச் சொல்லி அனுப்பிவிட்டார். ஆலமர நிழலில் சிறிய தாவரங்களால் வளர முடியாது. அதேபோல், தேரையர் தன் அருகில் இருந்தால் வளர முடியாது என்று அகத்தியரும் நினைத்தார். அவர் எண்ணியது மிகச்சரி.


தேரையர் தனித்துச் சென்று பல அரிய மருந்துகளைக் கண்டறிந்தார். தன் முனைப்பை நூலாகவும் எழுதினார். பதார்த்த குணசிந்தாமணி, நீர்க்குறி, நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச் சுருக்கம் போன்ற நூல்கள்அவற்றுள் சில. வைத்திய யமக வெண்பா, மணிவெண்பா மருந்துப்பாரதம் என்றெல்லாம் அவர் எழுதிய நூல்களே, இன்றைய ஆயுர்வேத வைத்தியத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன.


ஒருமுறை, வயிற்றுவலி வந்த ஒருவருக்கு அகத்தியர் கொடுத்த மருந்தாலும் குணமாகவில்லை. ஆனால் அதே மருந்தைத் தேரையர் கொடுத்திட, அவருக்குக் குணமாயிற்று. அகத்தியரே, ‘இது எப்படி’ என்று கேட்டு குழம்பி நிற்க, ‘அந்த மருந்தை வாயில் உள்ள எச்சில் மற்றும் பற்களில் உள்ள பாஷாணங்கள் படாமல் வயிற்றில் செலுத்தியதால் வயிற்றுவலி குணமாயிற்று’ என்றார் தேரையர். அவரது இந்த நுட்பம் அகத்தியரை பெரிதும் பரவசப்படுத்திற்று. தேரையரின் புகழ், உலகம் முழுவதும் பரவிட திருவுளம்கொண்டார். அதற்கு ஏற்ப ஒரு காலமும் உருவானது.


தேரையர், அகத்தியரைப் பிரிந்து நெடுந்தூரம் சென்று தாடியும் மீசையும் வளர்த்து முற்றாக உருமாறிவிட்ட காலம் அது. அகத்தியருக்கு திடீரென்று கண்பார்வை மங்கியது. அது எதனால் என்பது, திரிகாலஞானியான அகத்தியருக்கும் தெரிந்தது. பூமியில் மனிதப் பிறப்பெடுத்துவிட்டவர்களை பூமியின் வினைப்பாடுகள், கணக்குத் தீர்த்துக் கொள்ளாமல்விடுவதேயில்லை. அகத்தியரையும் ஒரு கர்மக் கணக்குதான் கண்ணொளியைக் குறைத்து தடுத்துக் கொண்டிருந்தது.


ஆனாலும் அவரது தர்மக்கணக்கு, சீடன் தேரையர் வடிவில் அவரை ஆட்கொண்டது. அகத்தியர் பரிபூரண கண்ணொளிபெற ஒரு மூலிகை தேவை. அதை எவர் பறித்தாலும் அங்கே விஷப்புகை கிளம்பி, பறித்தவர் பார்வை பறிபோய்விடும். தேரையர், தன் குருநாதரான அகத்தியருக்காக தன் கண்ணை இழந்தாவது முயல்வாரா… இல்லை வேறு மார்க்கத்தில் செல்வாரா என்று அனைவரும் கவனித்தபோது, தேரையரும் அம்பிகையைச் சரண்புகுந்தார்.


அது நாள் வரை இறைவேட்கையை சிறிதாகவும், மருத்துவச் சூரியனாவதை பெரிதாகவும் கொண்டிருந்த தேரையர், குருநாதருக்காக இறை வேட்கையைப் பெரிதாகக் கருதி அம்பிகையைச் சரண்புகுந்து தனக்கு உதவிடும்படி கண்ணீர் மல்கக் கேட்டார். அம்பிகையும் தேரையரிடம் அகத்தியருக்கான மூலிகையைத் தந்து ஆசிர்வதித்துச் சென்றாள்.


அதன்பின் அகத்தியரின் பார்வையும் முழுமையாகத் திரும்பியது. சீடன் தேரையரை கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினார். ‘‘அம்பிகை அருளை நீ பெற வேண்டும் என்பதற்காகவே எனக்கு பார்வைக் குறைவு ஏற்பட்டது’’ என்று கூறிய அகத்தியர், ‘‘நீ சித்தனுக்குச் சித்தன். முனிவனுக்கு முனிவன்’’ என்று வாழ்த்தினார்.


மொத்தத்தில், தேரையர் சித்தர் வாழ்வு நுட்பம், விடாமுயற்சி, பணிவு, இறையச்சம் ஆகிய அனைத்துக்குமே ஒரு சான்று போல அமைந்துவிட்டது. சில வரலாற்றுப் பிறழ்வு காரணத்தால்அகத்தியரின் சீடர் என்பதை சிலர் போகரின் சீடரே தேரையர் என்பர்.

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்?

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்


''உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, 'ஸம்ஸ்காரம்'பண்ணுகிறேன் என்று இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?'' என்று கேட்கலாம்.

சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.

சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை 'அந்த்யேஷ்டி'- அந்திய இஷ்டி - அதாவது 'இறுதியான வேள்வி' என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.

'ஸம்ஸ்காரம்'என்றால் 'நன்றாக ஆக்குவது' என்று அர்த்தம். ('நன்றாக ஆக்கப்பட்ட'பாஷைதான் 'ஸம்ஸ்க்ருதம்'.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் - அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது.

ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

'தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்' என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது.

காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம் செய்ய முடிகிறது.

பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு - என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!

ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை 'பம்ப்' பண்ண ஒன்று- எல்லாவற்றுக்கும் மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை - என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக் கல்பித்திருக்கிறான்.

சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு 'பர்பஸ்' இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம்.

இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.

யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே? கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் 'நிஷித்தம்' என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான்.

''தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?''- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் - என்று வசனமே இருக்கிறது. '' தேஹோ தேவாலய : ப்ரோக்தா '' - உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ' காயமே கோயிலாக ' என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ''முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்'' என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.

ஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று 'டிஸ்போஸ்' பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.
செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது? அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?

ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ''அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்'' என்ற எண்ணத்துடன் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.

சைவ ஸித்தாந்தத்தில் ஈஸ்வரன்தான் ஜீவனுக்குத் தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறான் என்பார்கள். லோகத்தை (புவனத்தை) படைத்து, அதிலுள்ள போகங்களை அநுபவிப்பதற்காகவே மநுஷ்ய சரீரத்தை (தநுவை) ஸ்ருஷ்டி செய்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை அவன் வைத்திருக்கிறான். கர்மாவைத் தீர்த்துக்கொள்ளும்வரை போகங்களை அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று இப்படி வைத்திருக்கிறான். எனவே அவனுடைய பிரஸாதமான தநுவைக் கரணங்கள் ஓய்ந்த பிற்பாடும் அதற்குரிய கௌரவத்தைக் கொடுத்து ஸம்ஸ்கரித்துத்தான் அவனிடம் வேள்விப்பொருளாகத் திரும்பக்கொடுக்க வேண்டும்.

இதிலே ஒரு வித்யாஸம். மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய 'இஷ்டி'யை அவன் பண்ணமுடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது அல்லவா? அதனால் அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம்.

'உயிரோடு இருக்கிறவரையில் உபகாரம் பண்ண வேண்டியதுதான்; போன உயிரும் வேறு எங்கோ இருக்குமாதலால் அதற்கு ச்ராத்தாதிகள் பண்ண வேண்டியதுதான்; ஆனால் உயிர்போன உடலுக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?' என்று முதலில் கேட்டுக்கொண்டோம்.

இப்போது அலசிப் பார்த்துக் கொண்டதிலோ பகவானின் பராமத்புத ஸ்ருஷ்டியான சரீரம் உயிரற்ற பிறகுங்கூட அதற்கான மரியாதையைப் பெற்று பகவானிடமே சேர்பிப்பிக்ப்பட வேண்டும்; உடம்புக்குச் செய்கிற இந்த ஸம்ஸ்காரந்தான் முழுக்க நம் பொறுப்பில் இருப்பது; அதனால் இதைச் செய்யாவிட்டாலே நமக்குப் பெரிய தோஷம் என்று தெரிகிறது!

Thursday, October 17, 2019

சிம்ம ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020

சிம்ம ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020



சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்த மனக்குழப்பங்கள் நீங்கப்போகிறது. ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறப்பபோகிறது.


குருபகவான் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார். ராசியை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும் ஐந்தாம் வீட்டில் ஆட்சியாக அமர்வதால் பொற்காலம் வந்து விட்டது. மூன்று மற்றும் நான்காம் வீட்டில் இருந்த குருவினால் பலவித குழப்பங்கள் இருந்தது. இனி இந்த குழப்பங்கள் தீர்ந்து நிம்மதியை தரப்போகிறார். ஐந்தாம் வீட்டில் குரு அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் குழப்பங்கள் தீரும்.



கடந்த இரண்டு ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்க்கு வருகிறார். இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். இந்த குரு பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் நன்மைகளையும் அள்ளித்தரப்போகிறது.


புண்ணியங்களால் நன்மை


பொன்னவன் குருவின் பார்வை உங்கள் ராசி மீது முழுவதுமாக விழுவதால் நீங்க நினைத்தது நடக்கும் தொட்டது துலங்கும் காலம் வந்து விட்டது. ஐந்துக்கு அதிபன் ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். உங்களின் ஆழ் மனதில் உள்ள ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். புதிய தொழில், ஆசையை நிறைவேற்றுவார் குரு. நம்பிக்கை அதிகரிக்கும் முன் ஜென்ம புண்ணியங்கள் நிறைவேறும். நல்லவைகள் யாவும் வெளியே வரும்.


ராஜாங்க பதவி தேடி வரும்

குழந்தை பேறு கிடைக்கும். திருமணம் நடைபெறும் சனியோடு குரு இணையும் காலம் ராஜயோகம். பயணங்களில் வெற்றி, நல்ல வருமானம், நல்ல வேலை கிடைக்கும். உங்கள் ராசியை குரு பார்ப்பது ராஜயோகத்தை தரும். ராஜங்க பதவி தேடி வரும். பெயர் புகழ் கீர்த்தி தரும் குரு லாப ஸ்தானமான மிதுனத்தை பார்க்கும் போது தொழிலில் வெற்றி லாபத்தை தருவார். ஆளுமை தன்மையுள்ள விசேசத்தை தருவார். ஆற்றல் வாய்ந்த நேரம்.


திருமண வாய்ப்பு




அதிர்ஷ்டம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து வருமானம் கிடைக்கும். அப்பாவினால் லாபம் கிடைக்கும் காரணம் ஒன்பதாம் வீட்டினை குரு பார்க்கிறார். அப்பாவினால் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு இரண்டாம் திருமண வாய்ப்பும் அமையும். எந்த வேலையில் இருந்தாலும் உங்களின் திறமை பளிச்சிடும்.


புதிய வேலை கிடைக்கும்



உங்கள் ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும்.பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும்.வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழுது தான் கிடைக்க போகிறது.


குழந்தைகளால் மகிழ்ச்சி



நீங்க சொல்வதை எல்லாம் கேட்க தயாராகி விட்டனர். படிப்பு, வேலைகளில் பிள்ளைகளின் திறமைகள் பளிச்சிடும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்கள் ராசியை பார்ப்பதால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். வம்பு வழக்குகள் நீங்கும். வீரு கொண்டு எழுவீர்கள். சோம்பல் விலகும். பிசினசில் வளர்ச்சியும் வேகமும் அதிகரிக்கும் முன்னேற்றத்தையும் தரும். சொல்வாக்கும், செல்வாக்கும் பெருகும். எடுக்கிற காரியங்களில் வெற்றி கிடைக்கும் தொட்டவை துலங்கும். சகோதர உறவுகளினால் அன்பும் ஆதரவு கிடைக்கும்.


திருமணம், புத்திரபாக்கியம்



குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். வெளிநாடு செல்லும் யோகம் வந்து விட்டது. பாஸ்போர்ட் விசா பிரச்சினைகள் தீரும். தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள்.நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள்



நரசிம்மர் வழிபாடு நன்மை



11 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் வழக்குகளில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம். சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். கேது உடன் குரு இணையும் கால கட்டத்தில் பிள்ளைகளை கோவிலுக்கு அழைத்துப்போங்கள். விநாயகர், நரசிம்மர் வழிபாடு நன்மையை தரும்.

மிதுன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020

மிதுன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020



  


மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடத்து குருவினால் பல அல்லல்கள் ஏற்பட்டது. இப்போது களத்திர ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் பல அற்புதங்கள் நிகழப்போகிறது.

ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியை பார்க்கிறார். கண்டக சனி கஷ்டம் ஒரு பக்கம், ஆறாம் இடத்து குரு பாதிப்பு மறுபக்கம் என சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று பாடிக்கொண்டிருக்கிறீர்கள். இனி கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது.

ஆறாம் இடத்து குருவினால் உழைப்பாளிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் இருந்தது. கடன் பெருகியது. எதிரிகள் தொந்தரவு ஏற்பட்டது. வேலை செய்யும் இடத்தில் பதவி இடமாற்றம் ஏற்பட்டது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நவம்பரில் நிகழப்போகும் குருப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கப்போகிறது. ஏழாம் வீட்டில் குரு அமர்ந்து தனது பொன்னான பார்வையால் உங்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் போன்றவை அடுத்த ஓராண்டிற்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.


நன்மைகள் நடைபெறும்

ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு குரு கெடுதல் செய்ய மாட்டார் நன்மைதான் செய்வார். கேதுவை நோக்கி குரு நெருங்குவதால் வீடு, அலுவலகத்தில் நன்மைகள் நடைபெறும். சூழ்நிலைகள் மாறப்போகிறது. ஏழாம் வீட்டில் சனி கேது கிரகங்களினால் தினந்தோறும் சண்டைதான். குரு ஏழாம் வீட்டிற்கு வந்து சனியும் கேதுவும் இணையப்போகும் காலம் இதுவாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கப்போகிறது.

தம்பதியடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். தம்பதியர் இடையே பேச்சில் கவனம் தேவை இல்லாவிட்டால் தவறாக புரிந்து கொள்ளப்படுவார்கள். பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.


வெளிநாடு வேலை வாய்ப்பு


உங்கள் ராசிக்கு ஏழு, பத்தாம் அதிபதி குரு ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சியினால் பொன்னான கால கட்டம் வரப்போகிறது. வெளிநாடு வேலை வாய்ப்பு வரப்போகிறது. தொழிலில் முன்னேற்றம் அமையும்.வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும். சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.


குரு பார்வையால் நன்மை

பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும். சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடக்கும்.


யோகமான கால கட்டம்



குரு உங்களின் லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும் தன லாபம் கிடைக்கும். உறவுகள் ஒற்றுமை கூடும்.

மிதுனத்தை குரு பார்ப்பதால் கேந்திர ஸ்தானத்தில் ஆட்சி பெறும் போது ஹம்ச யோகம் கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் அன்பும் பிள்ளைகளின் அரவணைப்பு கிடைக்கும். விஐபிக்களின் அரவணைப்பு கிடைக்கும்.


யோக கால கட்டம்
குருவினால் மாணவர்களின் திறமைகள் பளிச்சிடும். உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மிகச்சிறந்த மேன்மைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல யோகமான கால கட்டம் வரப்போகிறது. கல்வியில் ஞாபக சக்தி அதிகரிக்கும். குரு பாதகாதிபதியாக இருந்தாலும் விழிப்புணர்வோடு இருந்தால் பிரச்சினைகள் இல்லை.


செல்வம் செல்வாக்கு கூடும்

10த்துக்கு பத்தாம் வீட்டில் குரு பார்வை படுவதால் ஹம்ச யோகம் அமைகிறது. புதிய வேலைகளால் நன்மை. திடீர் மாற்றம் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ராசிக்கு மூன்றாம் வீடான சிம்மத்தின் குரு பார்வை வருமானத்தை அதிகரிக்கச் செய்யும். தைரியம் கூடும். மூன்றாம் வீட்டில் குரு பார்வை படுவதால் சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

 இளைய சகோதரர்களால் நன்மையே நடைபெறும். லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் வருமானம் கூடும். செல்வம் செல்வாக்கு கூடும். சாதனை புரிய வைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களை ஜொலிக்க வைக்கும். குரு மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.